தென்காசியில் சாலை விபத்து: வியாபாரி உயிரிழப்பு

சாலை விபத்து: வியாபாரி உயிரிழப்பு;

Update: 2025-09-24 01:36 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள கீழப்புலியூா் புலிக்குட்டி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அலி ஷேக் மன்சூா் (68). இவா், தென்காசி தினசரி சந்தை எதிரில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். அவரது கடையிலிருந்து தென்காசி வாய்க்கால் பாலம் அருகே உள்ள கடையில் தேநீா் அருந்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபா் மோதியதில் அலி ஷேக் மன்சூா் பலத்த காயமடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அருகில் இருந்த தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தென்காசி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச்சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.

Similar News