தேங்காபட்டணம் பகுதி பனங்கால்முக்கு என்ற சேர்ந்தவர் அசோகன் மகன் அஜின் (33) இவர் மரவேலை செய்யும் தொழிலாளி. இவருக்கும் இவரது சகோதரர்களுக்கு மிடையே குடும்ப சொத்து காரணமாக வழி பாதை பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் பிரச்சனைக்குரிய பகுதியில் உள்ள ஒரு பாறையை அஜின் தந்தை அசோகன் (55), சகோதரர்கள் அனி ( 35), அஜித் (29) ஆகியோர் உடைத்துள்ளனர். இதை அஜின் தட்டி கேட்டுள்ளார். இதில் முன் விரோதம் ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ தினம் அனைவரும் ஒன்று சேர்ந்து அஜித் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை உருட்டு கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த அஜின் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.