குமரி மாவட்டம் திருவட்டார் பகுதி சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (42)மீன் வியாபாரி. இவரது மனைவி பியூலா மேரி (37). 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இதனால் பியூலா மேரி சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். தற்போது ஊருக்கு வந்தார். நேற்று மைக்கேல் ராஜ் தனது மாமியார் வீட்டிற்கு சென்று தகராறு செய்து மனைவி பியூலா மேரி மற்றும் மாமியாரை கழுத்தில் வெட்டி உள்ளார். திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.