மத்திய பாஜக அரசு தமிழகத்தில் சென்னை உட்பட குமரி மாவட்டத்தின் 2 இடங்களில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தை திரும்ப பெறக்கேட்டு தொடர்ச்சியாக குமரி மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ மக்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து கடலுக்கு செல்லாமல் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.