இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்;
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை அறிந்திட திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) இணையதளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.