திருச்செங்கோட்டில் எய்ட்ஸ் குறித்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி கலை கலை நிகழ்ச்சிநகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார்
திருச்செங்கோட்டில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆகியவை இணைந்து நடத்திய எச்ஐவி, எய்ட்ஸ், மற்றும் பால்வினை தொற்று குறித்த ஒருங்கிணைந்த சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்,மற்றும் பேரணி நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆகியவை இணைந்து நடத்திய எச்ஐவி, எய்ட்ஸ், மற்றும் பால்வினை தொற்று குறித்த ஒருங்கிணைந்த சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம்,மற்றும் பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்தில் நடந்த பிரச்சார நிகழ்ச்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம் ஆடியும் நாட்டுப் புற பாடல்கள் பாடியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகளை திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார். பேரணியில் விவேகானந்தா பார்மசி கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடத்தினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் குகன், விவேகானந்தா பார்மசி கல்லூரி முதல்வர் முருகானந்தம்,நகராட்சி துப்புரவு அலுவலர் சோழ ராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் முருகேசன், மனோன்மணி சரவண முருகன், தாமரைச் செல்வி மணிகண்டன், ராதா சேகர், திவ்யா வெங்கடேஸ்வரன், சண்முக வடிவு பாபு, செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். வடக்கு, கிழக்கு தெற்கு ரத வீதிகள் வழியாக சென்ற பேரணி நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் சென்ற மாணவிகள் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தியபடியும் , விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய படியும் வந்தனர். முன்னதாக எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள்.