தற்கொலை செய்து கொண்டவர்- ராமேஸ்வரத்தை சேர்ந்த இன்ஜினியர்
சிறுமலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டவர்- ராமேஸ்வரத்தை சேர்ந்த இன்ஜினியர்;
திண்டுக்கல் சிறுமலை 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே நேற்று மரத்தில் தூக்கில் தொங்கியபடியே அழுகிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ் லியோன் மகன் மரியான் சிமியோன்(28) என்றும் மூன்று ஆண்டுகள் வெளிநாட்டில் இன்ஜினியராக வேலை பார்த்து கடந்த 3-ம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார் 4-ம் தேதி வீட்டை விட்டு சென்றவரை குறித்து தங்கச்சி மடம் காவல் நிலையத்தில் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.