திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் அறங்காவலர்கள் பதவியேற்பு முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்துமீண்டும் அறங்காவலர்குழு தலைவராக பொறுப்பேற்பு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் மற்றும் உப கோவில்களின் அறங்காவலர்களாக தமிழ்நாடு அரசால் நியமிக்கப் பட்ட தங்கமுத்து அர்த்தநாரி, பிரபாகரன், சித்ரா, பச்சியப்பன் ஆகியோர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் நடந்த அறங்காவலர் குழுத் தலைவர் தேர்தலில் தங்கமுத்து போட்டியின்றி தேர்வு;

Update: 2025-09-24 10:13 GMT
உலகப் புகழ் பெற்ற ஆணுக்கும் பெண் சரிநிகர் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக சிவனும் பார்வதியும் உமையொரு பாகன் திரு உருவத்தில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் திருமலை கோவில் புதிய அறங் காவலர்களாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப் பட்ட தங்கமுத்து,அர்த்த நாரி, பிரபாகரன், சித்ரா, பச்சியப்பன் ஆகியோர் இன்று முறைப் படி பதவி ஏற்றுக் கொண்டனர். கைலாசநாதர் ஆலயம் அருகே உள்ள திருக்கோவில் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாமக்கல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சு.சுவாமிநாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் தலைவரை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அறங்காவலர் குழுக் தலைவராக இருந்த செ. தங்கமுத்து மீண்டும் தலைவராக தேர்வு செய்யப் பட்டார்.  தலைவராக தேர்வு செய்யப்தங்க முத்துவிற்கு உதவி ஆணையர் சுவாமிநாதன் செயல் அலுவலர் ரமணி காந்தன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News