இது தாங்க கடிச்சது பாம்புடன் வந்தவரால் அதிர்ச்சி
இது தாங்க கடிச்சது திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்து அதிர்ச்சி கொடுத்த வாலிபர்;
திண்டுக்கல், தாடிக்கொம்பை அடுத்த உலகம்பட்டியில் தோட்டப் பணியில் இருந்த சூசை மாணிக்கம் மகன் பீட்டர்(42)-ரை விஷப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார் இச்சூழலில், அவருடன் வந்த வாலிபர் கடித்த விஷப்பாம்பையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து, பீட்டருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் பாம்பைக் கண்ட நோயாளிகள் பயந்ததால். அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.