விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின் வயர்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகள்

வேடசந்தூர் அருகே அடுத்தடுத்து 7 விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின் வயர்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகள்;

Update: 2025-09-24 11:55 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சி எஸ்.புதூரில் மின்கம்பங்கள் இருந்து விவசாய கிணறுகளுக்குள் செல்லும் மின் வயர்களை நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமிகள் அடுத்தடுத்து வெட்டி எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் விவசாயிகள் பாலசுப்பிரமணி, கணேசன், ரங்கராஜ் உள்ளிட்ட 7 விவசாயிகள் தனித்தனியா புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மின் வயர்களை வெட்டி திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Similar News