ராஜாஜி பூங்காவில் தவறவிட்ட சான்றிதழ், செல்போன் ஒப்படைப்பு
தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் தவறவிட்ட சான்றிதழ், செல்போன் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் ஒப்படைத்தார்.;
தூத்துக்குடி பாளை ரோடு ராஜாஜி பூங்காவில் நாகர்கோவிலை சேர்ந்த சென்னையில் பணி செய்யும் ராம்குமார் என்பவர் தூத்துக்குடி வந்த இடத்தில் தனது ஒரிஜினல் கல்லூரி கல்விச் சான்றுகள், ஆதார் கார்டு டிரைவிங் லைசன்ஸ் வங்கி பாஸ்புக் ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை தவற விட்டுவிட்டார். அதனை கண்டெடுத்த பூங்கா காவலாளி கோபால் ராஜாஜி பூங்கா நடைபயிற்சி நண்பர்களிடம் தகவலை கூறினார். உடன் அங்கு வந்த தெர்மல் நகர் காவல் நிலையத்தில் பணி செய்யும் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தவறவிட்ட நபரை தொடர்பு கொண்டு அவரை அங்கு வரவழைத்து அனைவர் முன்னிலையிலும் பொருட்களை ராம்குமார் வசம் ஒப்படைத்தனர். பொருள்களை கண்டெடுத்து ஒப்படைத்த காவலாளியை அனைவரும் பாராட்டினர். இந்நிகழ்வில் ராஜாஜி பூங்கா நடைபயிற்சி நண்பர்கள் கலந்து கொண்டனர்.