சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாத்தல் வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல் குறித்த நகர விற்பனைக்குழு கூட்டம்திருச்செங்கோட்டில் நடைபெற்றது

பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடைபாதை வியாபாரிகளுக்கு என 10 இடங்களை தேர்வு செய்து அங்கு தான் வியாபாரம் செய்ய வேண்டும் எனவும், எங்கு வியாபாரம் செய்யக் கூடாது எனவும் அறிவுறுத்திஅது குறித்த வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது;

Update: 2025-09-24 16:04 GMT
திருச்செங்கோடு நகரில் பண்டிகை காலங்களில் முகூர்த்த காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது இதற்கான காரணம் என்ன என ஆய்வு செய்தபோது நடைபாதை வியாபாரிகள் பண்டிகை காலங்களில் ஆங்காங்கே கடைகள் போடுவதால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் வாகனங்களை அங்கங்கே நிறுத்துவதால் இது போன்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கண்டறிந்து இதனை சீர் செய்யும் வகையில் நடைபாதை வியாபாரிகள் என ஒம்போது இடங்களைத் தேர்வு செய்து அங்கு மட்டும்தான் வியாபாரம் செய்ய வேண்டும் எனவும் எங்கெல்லாம் கட்டாயம் வியாபாரம் செய்யக்கூடாது எனவும் இடத்தை தேர்வு செய்து இது குறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நடைபாதை வியாபாரிகள் என அனைவரின்கருத்துக்களை தெரிந்து கொள்ளும் வகையில் கருத்து கேட்பு கூட்டம் திருச்செங்கோடு நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், பொறியாளர் சரவணன், துப்பரவு அலுவலர் சோழராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி போக்குவரத்து காவல்துறை ,நகரமைப்பு ஆய்வாளர்கள் (TPI) வணிகர்கள் பேரமைப்பு செயலாளர் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் விதைகள் அமைப்பு நிர்வாகிகள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்ட நகர விற்பனைக்குழு பிரதிநிதிகள் ராஜா, கனிமொழி, சுந்தரம்,வீரமணி, ஆனந்தி, சாஜிதா, தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாத்தல் மற்றும் சாலையோர வியாபாரத்தினை ஒழுங்குபடுத்துதல் குறித்த விற்பனை குழு கூட்டத்தில் திட்டத்தின் நோக்கம் மற்றும் அதை செயல்படுத்த உள்ள விதம் ஆகியவை குறித்து நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு விரிவாக எடுத்துக் கூறினார் வியாபாரிகளுக்குவியாபாரம் செய்ய ஒன்பது இடங்களை ஒதுக்கி அங்கு மட்டும் வியாபாரம்அனுமதிக்கப்படும் எனவும் எந்தெந்த இடங்களில் வியாபாரம் செய்யக்கூடாது தடை செய்யப்பட்ட பகுதி எது என்பது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.வியாபாரம் செய்யக்கூடிய பகுதிகளாக வார்டு எண் 10 புதிய பேருந்து நிலையம் வார்டு எண் 11 பழைய பேருந்து நிலையம் வார்டு எண் 28 மற்றும் 32 வாடகை மற்றும் 23 வார சந்தை அருகில் 1 7 மற்றும் 10வது வார்டுகளில் சங்ககிரி ரோடு பட்டறை மேடு பகுதி 6வது வார்டு உழவர் சந்தை 26 வது வார்டு நாமக்கல் ரோடு அண்ணா பூங்கா 23 வது வார்டு சந்தைப்பேட்டை ஒன்றாவது வார்டு சீதாராம் பாளையம் 3 மற்றும் ஐந்தாவது வார்டு சேலம் ரோடு ஆகிய 10 பகுதிகள் வியாபாரப் பகுதிகளாகவும் வியாபாரம் தடை செய்யப்பட்ட பகுதிகளாக 24 வது வார்டு அரசு தலைமை மருத்துவமனை அருகிலும் 10 மற்றும் 11-வது வார்டு பகுதி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகிலும் 17வது வார்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சாலையிலும் 23 வது வார்டில் 17 மாளிகை ஈரோடு சாலை அருகிலும் ஒன்னாவது வார்டு ஒதுக்கீடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் 10 மீட்டர் சுற்றளவுக்கும் 11 மற்றும் 12 வது வார்டு பழைய சேலம் ரோடு சின்னபாவடி         சங்திலும் 28 மற்றும் 30வது வார்டுகளில் கொக்கராயன் பேட்டை ரோட்டிலும் வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி எனவும் எப்பொழுதும் வியாபாரம் செய்யக் கூடாதஇறுதியென 24 வது வார்டு கைலாசநாதர் ஆலயம் எனவும் வரையறுக்கப்பட்டு இந்தப் பகுதிகளில்நிலையான விற்பனையாளராக உள்ளவர்களுக்கு 10 சதுர அடிகள் வரை வருடத்திற்கு வழிகாட்டு மதிப்பீட்டின்படி ரூ 750க்கு குறையாமலும் 10 சதுர அடி முதல் 25 சதுர அடி உயரம் வரை 1500க்கு குறையாமலும் 25 சதுர அடிகளுக்கு மேல் உள்ள கடைகளுக்கு 3000 க்கு குறையாமலும் பகுதிநேர நிலையான விற்பனையாளர் அல்லது நேர பகிர்வு விற்பனையாளர்களுக்கு 10 சதுர அடிகள் வரை 375 க்கு குறையாமலும் பத்து முதல் 25 சதுர அடி வரை 750க்கு குறையாமலும் 25 சதுர அடிகளுக்கு மேல் 1500 குறையாமலும் இதேபோல் நடமாடும் விற்பனையாளர் மோட்டார் பொருத்தப்பட்ட வண்டியுடன் வியாபாரம் செய்பவர்களுக்கு 10 சதுர அடிகள் வரை வருடத்திற்கு 750 25 சதுர அடிகள் வரை 1500 25 சதுர அடிகளுக்கு மேல் 3000 தொடர்ந்து நடமாடும் விற்பனையாளர் மோட்டார் பொருத்தப்படாத வண்டியுடன் உள்ளவர்களுக்கு 10 சதுர அடிகள் வரை 375 25 சதுர அடிகள் வரை வருடத்திற்கு 750 25 சதுர அடிகளுக்கு மேல் 1500நடமாடும் விற்பனையாளர் தலைச் சுமையில் வருடத்திற்கு 250 மாதாந்திர பராமரிப்பு கட்டணமாக 10 சதுர அடிகள் வரை மாதம் நூறும் 25 சதுர அடிகள் வரை மாதம் 125 சதுர அடிகளுக்கு வரை 150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஇந்தக் கட்டணம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வியாபார இடத்தின் அளவுக்கு ஏற்றார் போல் மாற்றி நிர்ணயிக்கப்படும் நிர்ணயிக்கப்பட்ட வியாபார கட்டணத்தை நகராட்சியில் செலுத்தி வியாபார சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும் வியாபாரப்பகுதி வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் வரையறுக்கப்பட்ட வியாபாரப்பகுதி ஆகிய பகுதிகளில் வியாபாரம் செய்பவர்கள் நகர விற்பனை குழுவில் தெரிவிக்கப்பட்ட விதிகளின் படி மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் இதனை மீறி வியாபாரம் செய்பவர்கள் அடையாள அட்டை வியாபார சான்று ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததோடு இதனை நகர வியாபாரக் குழுவின் பார்வைக்கும் பதிவிக்கும் வைப்பதாகவும் இதனை அவர்கள் கண்காணித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த பலரும் நடை பாதைகளில் வியாபாரம்செய்வதால் தங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் இதனை கலைய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எடுத்துக் கூறினார்கள். மழைக்காலங்களில் ரோடுகளில் தண்ணீர் ஓடுவதை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாக மாவட்ட செயலாளர்செல்வகுமார் கோரிக்கை வைத்தார்.மேலும் 4 ரக வீதிகள் மற்றும் நகரின் பல பகுதிகளில் வாகன நிறுத்தங்கள் முறையாக இல்லாததால் ரோடுகளில் வாகனம் நிறுத்துவதால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது சாதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் கால்வாய்கள் போதுமான அளவு இருந்தபோதிலும் கடைக்காரர்கள், கறி கடைக்காரர்கள்,தங்களது கடைகளில் சேரும் குப்பைகளை சாக்கடைகளில் போடுவதாலும் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி பிளாஸ்டிக் பொருள்களை சாக்கடைகளுக்குள் வீசுவதாலும் ஏற்படும் அடைப்புகள் இந்த பாதிப்புக்கு காரணமாக இருக்கிறது எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்து சிரமத்தை தவிர்க்க வேண்டும் எனநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ரோட்டரி சங்க நிர்வாகிகள் சாலையோர வியாபாரிகளுக்கு வெயிலில் மழைக்காலங்களில் பாதுகாக்கும் வகையில் குடைகள் அமைத்துத் தர தங்களால் முடிந்ததை செய்வதாக தெரிவித்தனர்.திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி கூட்டத்தில் பேசிய போது நகரின் பல பகுதிகளில் நடைபாதைகளில் கடைகள் ஆக்கிரமிப்புகள் நிறைய உள்ளது இதனை அகற்றாவிட்டால் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய முடியாது வாகனங்களை நிறுத்துபவர்கள் என்ன சட்ட விதிமுறைகளை எடுத்து கூறினாலும் அதன்படி நடப்பதில்லை என கூறினார் விதிகளை மீறி நிறுத்தப்படும் வண்டிகளை தூக்கு வாகனங்கள் வைத்து தூக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலை துறையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினருக்கு எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகரப் பகுதிகளில் இருக்கிற ஆக்கிரமிப்புகளை நாங்கள் எடுத்து தருகிறோம் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News