குமரி : அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

3 பேர் கைது;

Update: 2025-09-25 03:47 GMT
கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி., குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில், மாவட்ட குற்றபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் தலைமையிலான போலீசார் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி ரம்யா (வயது 31) மற்றும் அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் மகன் சுரேஷ்(32) மற்றும் கீழே சரக்கல்விளை பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் அனுசியா(35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர்கள் பல நபர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Similar News