தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கை வலியுறுத்தி திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு;
தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலம் வரை ஊதியம் 15,000 வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து அவர்கள் இறப்பினை எய்தும் போது 5 லட்சம் வழங்கிட வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை தேக்க நிலை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உட்பட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று 24.09.25 திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம், ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர் சங்கம், உட்பட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.