திருவேங்கடத்தில் கூட்டு குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கூட்டு குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் தாலுகா அலுவலகம், அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் நிறுவனங்கள் அமைந்துள்ளது . பள்ளிக்கு செல்லும் மாணவ அரசு பணிக்கு வரக்கூடிய ஊழியர்கள் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திருவேங்கடத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் திருவேங்கடப் பகுதிகளில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவேங்கடம் பஜாரில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது இந்த நிலையில் கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது, இதனால் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள்,மாணவ மாணவிகள், பொதுமக்கள் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த கூட்டுக் குடிநீர் திட்ட பணியை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.