அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கழிவறை பணி

திட்டுவிளை;

Update: 2025-09-25 07:58 GMT
பூதப்பாண்டி பேரூராட்சி க்குட்பட்டதிட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளி மேம்பாட்டு நிதியின் 6வது நிதி குழு மானிய திட்டத்தில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் மாணவிகளுக்கான புதிய கழிவறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. பணியின் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ் அடிக்கல் நாட்டினார். உடன் தலைமையாசிரியர் ஸ்டெல்லா ஜெனட், பேருராட்சி கவுன்சிலர்கள் நபிலா, யுனிஸ்பாபு, அசாருதீன் , அன்சார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News