தோனி தொழிலாளி மாலத்தீவு கடலில் மாயம்

தூத்துக்குடி தோனி தொழிலாளி மாலத்தீவு கடலில் மாயம்;

Update: 2025-09-25 10:40 GMT
தூத்துக்குடி ஜார்ஜ் ராேடு, காந்தி நகர் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் அண்டோ மகன் ஜெகதீஷ் (40). இவர் தோணியில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர், கடந்த 19ஆம் தேதி இரவு தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு, உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற தோணியில் 12 பேருடன் சென்றுள்ளார். இந்நிலையில் செப். 22ஆம் தேதி அதிகாலை மாலத்தீவு துறைமுகத்தில் நுழைய அனுமதிக்காக நிறுத்தப்பட்டிருந்த, தோணியிலிருந்து ஜெகதீஷ் தவறி கடலுக்குள் விழுந்துவிட்டாராம். இதுகுறித்து தகவலின் பேரில் மாலத்தீவு காவல் துறையினர், கடலோர காவல் படையினர் ஜெகதீஷை தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Similar News