அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்டம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.;

Update: 2025-09-26 13:58 GMT
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்டம்,  சங்கத்தின் தலைவர் மற்றும் முதல்வர் (பொ) சரவணாதேவி  தலைமையில் நடந்தது.  சங்கத்தின் இணைச் செயலாளர் கோமதி வரவேற்றார். முதல்வர் சரவணாதேவி பேசுகையில்,  தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்காக வழங்கி வரும் பல்வேறு உதவிதிட்டங்களான புதுமைப்பெண்,  தமிழ் புதல்வன், கல்வி உதவித்தொகை ஆகியவற்றைப் பற்றி பெற்றோர்களிடையே எடுத்துரைத்தார். மேலும்,  நான் முதல்வன் திட்டத்தைப் பற்றியும், மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழி வகைகளைப் பற்றியும் எடுத்து கூறினார். மாணவர்கள் தங்களது வாழ்வில் முன்னேற, பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பை தர  வேண்டும் என கேட்டுக்கொண்டார். சங்கத்தின் பொருளாளர் .கோவிந்தராஜு  ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.  பெற்றோர்கள் பெருமளவில் பங்கேற்று, மாணவர்கள் மற்றும் கல்லூரியின் வளர்ச்சிக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகளைப் பற்றிய கருத்துக்களை  பதிவு செய்தனர். சங்க செயலர் சண்முகம் உள்ளிட்ட அனைத்து துறை தலைவர்களும் வாழ்த்தி பேசினார்கள்.  சங்கத்தின் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Similar News