சீமானுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கண்டனம்!

சீமானுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கண்டனம்!;

Update: 2025-09-27 11:11 GMT
அண்ணா, எம்ஜிஆரை அவதூறாக பேசிய சீமானுக்கு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நானும் அரசியலில் இருக்கிறேன் எனும் அரசியல் வெளிச்சதிற்காக, மறைந்த தலைவர்களின் வரலாறு அறியாமல், அரசியல் நாகரீகம் இன்றி வாய்க்கு வந்ததை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிதற்றிக் கொண்டிருக்கும் மக்களால் அரசியல் பொய்யர் என அழைக்கப்படும் சீமானின் இன்றைய அரசியல் தலைவர்கள் குறித்த தரம் தாழ்ந்த பேச்சு வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியல் களத்தில் இல்லாத, மறைந்த தலைவர்களைப் பற்றிப் பேசும்போது அவர்களின் பங்களிப்புகளையும், மரபுகளையும் நினைவுகூர்வது அரசியல் கண்ணியத்தின் ஒரு பகுதி அதுவும் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோர் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரும் தலைவர்கள் சீமான் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இன்னும் நீக்கமற நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆர் அவர்களை குறிப்பிட்டு பற்றி இன்று நீங்கள் பேசிய பேச்சு என்பது அரசியல் களத்தில் மன்னிக்க முடியாத செயல் நீங்கள் தலைவர் என கொண்டாடும் மேதகு பிரபாகரன், தலைவராக கொண்டாடியது எம்.ஜி.ஆர் அவர்களை என்ற வரலாறு மறந்து விட்டதா தங்களுக்கு? அரசியல் தெரியாமல், அரசியல் களத்தில் மாண்புமிக்கவர்களாக திகழ்ந்த எங்கள் தலைவர்களின் வரலாறு தெரியாமல் இனியும் பிதற்ற வேண்டாம் இனியும் தொடர்ந்தால் அது உங்களின் அரசியல் அழிவிற்கான ஆரம்பம் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் மறைந்த எம்.ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி அமைப்போம் என்ற லட்சிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Similar News