பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  கலெக்டர் பங்கேற்பு  

குமாரபாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில்  கலெக்டர் பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார்.;

Update: 2025-09-27 14:51 GMT
குமாரபாளையத்தில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு துறை, அரசு கலை, அறிவியல் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி சார்பில் நெகிழி இல்லா நாமக்கல் மாவட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி பங்கேற்று, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய சாலைகளின் வழியாக சென்று, பேரணி ஆனங்கூர் பிரிவு சாலையில் நிறைவு பெற்றது. காவிரி கரையோரப் பகுதியில் மாவட்ட கலெக்டர் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். மாஸ் கிளீன் பணியை துவக்கி வைத்தார். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி பயில அரசு சார்பில் உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் துர்கா கூறினார்.  இதில் நகராட்சி ஆணையாளர் ரமேஷ், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு துறை அலுவலர் செல்வகணபதி, சமூக ஆர்வலர் கவுன்சிலர்கள், மகளிர் குழுவினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News