பொறுத்து இருக்க வேண்டும், நல்லதே நடக்கும் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன்,பொறுமையாக இருந்தால் நல்லதே நடக்கும் என கூறி சென்றார்.;

Update: 2025-09-28 06:22 GMT
சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்திருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்கிறேன் என்றும், அதன் பிறகு தனது சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் நலத்திட்டங்கள் வழங்கும் மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தனது முன் கருத்து எந்த நிலையில் உள்ளது என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு, “நீங்கள்தான் அதை சொல்ல வேண்டும்” என்று பதிலளித்தார். “ஒன்றிணைவு நடக்கவில்லை” என்ற கூற்றுக்கு பதிலளித்த அவர், “பொறுத்து இருக்க வேண்டும், நல்லதே நடக்கும்” என்று தெரிவித்தார். “எவ்வளவு நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கும் அவர் மீண்டும் “பொறுத்து இருக்க வேண்டும், நல்லதே நடக்கும்” எனச் சிரித்தபடி கூறி, அங்கிருந்து புறப்பட்டார்.

Similar News