திருச்செங்கோட்டில் விஜய் குறித்து ஒட்டப்பட்ட மர்ம போஸ்டர்களால் பரபரப்பு
நாமக்கல்லில் நேற்று விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இன்று அவரை விமர்சிக்கும் வகையில்திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு. அச்சக பெயரோ, அச்சிட்டவர் பெயரோ இடம்பெறாமல் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை;
நாமக்கல் நகரில் நேற்று தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் திருச்செங்கோடு நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விஜயின் பேச்சை விமர்சிக்கும் வகையில், விமர்சன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர காவல் நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அச்சகத்தின் பெயரோ, போஸ்டரை வெளியிட்டவர் பெயரோ இல்லாமல் இந்த போஸ்டர்கள் இருப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ஒட்டியவர்கள் யார் இவர்களுடைய நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. கரூரில் நடைபெற்றுள்ள அசம்பாவித சம்பவத்தை தொடர்ந்து, இந்த போஸ்டர்கள் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.