நடிகர் தனுஷ் படம் பார்க்க வந்தவர்களுக்கு இட்லி வழங்கிய ரசிகர்கள்
நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் இன்று வெளியான நிலையில் திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்களுக்கு இட்லி பார்சல் வழங்கிய நடிகர் தனுஷ் ரசிகர் மன்றத்தினர்;
நடிகர் தனுஷ் நித்தியாமேனன், அருண்குமார் சத்யராஜ், பார்த்திபன், உள்ளிட்டோர் நடித்து தனுஷ் இயக்கி உள்ள இட்லி கடை திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது தூத்துக்குடியில் பல்வேறு திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் இட்லி கடை திரைப்படத்தை திரையரங்கிற்கு பார்க்க வந்த குத்து சண்டை வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு காலை உணவாக இட்லி வழங்கப்பட்டது.