நள்ளிரவில் சூரசம்ஹாரம் குலசையில் குவியும் பக்தர்கள்

நள்ளிரவில் சூரசம்ஹாரம் குலசையில் குவியும் பக்தர்கள்;

Update: 2025-10-02 05:28 GMT
தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா -பல்வேறு வேடம் அணிந்து ஊர் ஊராக காணிக்கை பெற்று வரும் பக்தர்கள்- இன்று நள்ளிரவு நடைபெறும் சூரசம்காரத்தை முன்னிட்டு குவிந்து வரும் பக்தர்கள் -3500 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது குலசேகரப்பட்டினம் இங்கு அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலானது மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தசரா திருவிழாவிற்கு மிகவும் புகழ் போனதாகும் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக விதவிதமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று முத்தாரம்மனுக்கு செலுத்துவது இந்த தசரா திருவிழாவில் சிறப்பு அம்சமாகும் கடந்த 3ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்ற தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி தங்களின் மனதிற்கு தோன்றிய வேடங்களை அணிகிறார்கள் அதன்படி தெய்வ வேடங்களான காளி முருகன் விநாயகர் கிருஷ்ணன் ராமர் வள்ளி என்றும் விலங்குகள் வேடங்களாக குரங்கு கரடி சிங்கம் மற்றும் பொதுவான வேடங்களான ராஜா ராணி குறத்தி பெண் கோமாளி பூதம் போன்ற வேடங்களையும் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக தனியாகவும் குழுக்களாகவும் சென்று காணிக்கை பெற்று வரும் பக்தர்கள் குலசேகரப்பட்டினம் சுற்றியுள்ள உடன்குடி திருச்செந்தூர் தூத்துக்குடி சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் முகாமிட்டுள்ளனர் மேள வாக்கியங்கள் முழங்க வேடம் அணிந்த பக்தர்கள் இசைக்கேற்ப நடனமாடி காணிக்கை வசூலில் ஈடுபடுகின்றனர் இந்த நிலையில் பத்தாம் திருவிழாவான இன்று நள்ளிரவு தசரா திருவிழாவில் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்காரம் நடைபெற உள்ளது இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர் இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தென்காசி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 3500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் வரக்கூடிய பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் தீயணைப்புணர் துறையினர் சார்பில் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் இதுபோல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு மூன்று இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி 300க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் களப்பணி ஆற்றி வருகிறார்கள் 24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சை பொது மக்களுக்கு கிடைக்கும் வகையில் பல்வேறு சிறப்பு செய்யப்பட்டுள்ளது இதுபோல் வரக்கூடிய பக்தர்களில் வசதிக்காக குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது

Similar News