கல்கத்தா காளி அலங்காரத்தில் அம்மன் தரிசனம்!
தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் நவராத்திரி விழா 10ஆம் நாளில் கல்கத்தா காளி அலங்காரத்தில் அமமன் காட்சியளித்தார்;
தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் நவராத்திரி விழா 10ஆம் நாளில் கல்கத்தா காளி அலங்காரத்தில் அமமன் காட்சியளித்தார். தூத்துக்குடி திருவிக நகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி நவராத்திரி விழா கடந்த செப்.23ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் நவராத்திரி விழா 10வது நாளான இன்று கல்கத்தா காளி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.