கோவில்பட்டியில் சோளத்தட்டை குடோனில் தீ விபத்து!
கோவில்பட்டியில் சோளத்தட்டை குடோனில் தீ விபத்து!;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி எட்டயபுரம் சாலையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (75). இவர், வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு எதிரே உள்ள குடோனில், தீவனத்துக்காக சோளத்தட்டைகளை இருப்பு வைத்திருந்தார். நேற்று மதியம் கிடங்கிற்கு வெளியே காய்ந்த புற்கள் மீது மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்தத் தீ, குடோனில் இருந்த சோளத்தட்டை மீது பற்றி, கிடங்கு முழுவதும் பரவியது. கிடங்கிலிருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இது குறித்து, கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.