அரசு அங்காடியில் பட்டுக்கூடுகள் விற்பனை அதிகரிப்பு
அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் 14 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை;
தர்மபுரி 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில் கடந்த சில தினங்களாக பட்டுக்கூடுகள் வரத்து சரிந்து காணப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஏலத்தில் தர்மபுரி மாவட்டம் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 2195 கிலோ பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 1 கிலோ படுகூடுகள் அதிகபட்சமாக ரூ.741, குறைந்தபட்சமாக கிலோ ரூ.342, சராசரியாக கிலோ ரூ.638 என 14,00,478 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.