விதிமுறைகளை மீறி சிறுவர்கள் ஓட்டிய வாகனங்கள் பறிமுதல்

அரூர் நகர பகுதியில் விதிமுறைகளை மீறி சிறுவர்கள் ஓட்டிய வாகனங்கள் பறிமுதல்;

Update: 2025-10-04 03:02 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சுற்றுவட்டாரங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பள்ளி மாணவர்கள் சாலைகளில் வாகனம் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து அரூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் சோதனை ஈடுபட்டபோது விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்த 11 சிறுவர்களை பிடித்து அவர்களிடம் இருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டது.

Similar News