புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு குறைகேட்பு முகாமில், திருநங்கைகள் நலச் சங்க செயலாளர் ஷிவானி தலைமையில் திருநங்கைகள் மனு அளித்தனர். ஏற்கெனவே வீடு ஒதுக்கீடு பெற்ற 8 பேருக்கு கடன் வழங்கவும், சமத்துவபுரத்தில் 10 பேருக்கு வீடு ஒதுக்கவும் கோரினர். ஆட்சியர் அருணா மனுக்களைப் பெற்று அதிகாரிகளுக்கு விரைவான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில் பல அதிகாரிகள் பங்கேற்றனர்.