மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது
தூய நல்ல ஆலோசனை மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது;
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டியில் அமைந்துள்ள தூய நல்ல ஆலோசனை மாதா ஆலய 136ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று மாலை 6.30 மணிக்கு கொடி பவனி நடைபெற்றது. பின்னர் மறைமாவட்ட முதன்மைகுரு ரவிபாலன் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பனிமய அன்னை ஆலய பேரருட்தந்தை ஸ்டார்வின் மறையுரை ஆற்றினார். இந்நிகழ்வில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனர் திருவிழாவில் தினமும் காலை நவநாள் திருப்பலியும் மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை பவனி. சனிக்கிழமை நடைபெறும். ஞாயிறு காலை திருவிழா ஆடம்பர திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னையின் புதிய ஆலயம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை வினித் ராஜா தலைமையில ஊர் நிர்வாகிகள், இறை மக்கள் செய்து வருகின்றனர்.