மணமேல்குடி அருகே மது விற்று இரண்டு பேர் கைது!

குற்றச் செய்திகள்;

Update: 2025-10-05 06:41 GMT
கட்டுமாவடி தோப்புவயல் பகுதியில் எந்நேரமும்ம மது விற்பனை நடப்பதாக மணமேல்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் மணமேல்குடி சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரியா மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு சாக்கு பை வைத்து மது விற்றுக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரிக்கும்போது அவர்கள் அதவத்தார் ரவிச்சந்திரன், ஈச்சங்குடி மாதவன் என்பதும், அவர்க ளிடமிருந்த 650 மதுபாட்டில்கள் மற்றும் பணம் பறி முதல் செய்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டது. கைது செய்யப்பட்டனர். கள்ள சந்தையில் மது விற்பதை பிடிப்பதில் முக் கிய பங்கு வகித்த சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரியா நேற்று மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News