குளத்தூர் தாலுக்கா, மின்னாத்தூர் ஊராட்சியை சேர்ந்த, நரங்கியன்பட்டி என்ற கிராமத்தில் தரௌபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அரசு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அரசு கட்டிடம் கட்ட வேண்டாம் என்றும் அதற்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தருகிறோம் என்றும் காவல்துறையிடம் பொதுமக்கள் முறையிட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.