மேல்காங்கேயன்குப்பம்: ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
மேல்காங்கேயன்குப்பம் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்பட்டது.;
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்காங்கேயன்குப்பம் ஊராட்சியில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இதனை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் திறந்து வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.