அறந்தாங்கி அடுத்த மறமடக்கியைச் சேர்ந்தவர் கருப்பாயி (79). இவருக்கு திருமணமாகி 62 வருடமான நிலையில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக மறமடக்கியில் உள்ள அவரது வீட்டின் அருகே உள்ள வாகை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் சீனிவாசன் (60) அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.