ஆலங்குடி, வடகாட்டில் முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலத்தின் 15வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மதுக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு ஆலங்குடி, புதுக்கோட்டை விடுதி, எம்.ராசியாமங்கலம், பாண்டிகுளம், கொத்தமங்கலம், ஆவணம், புள்ளான்விடுதி ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் இயங்காது என எஸ்பி அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.