சிறுவனை தாயே அடித்து விட்டு ஆசிரியர் அடித்ததாக நாடகம்!

குற்றச் செய்திகள்;

Update: 2025-10-07 07:35 GMT
புதுக்கோட்டை மாவட்டம் முதலிப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் இவர் முதலிப்பட்டியை அருகே உள்ள வயலோகம் அறிவுசார் குறைபாடு உடையவர்க்கான தனியார் சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார்.தொடர்விடுமுறை முடிந்து தங்கராஜை அவரது தாய் பள்ளியில் விடுவதற்காக வந்தபோது அவர் பள்ளிக்குச் செல்ல மறுத்தார் தனது மகனை தாய் சமாதானம் செய்து பள்ளியில் விட்டு சென்றார் சிறிது நேரத்தில் பள்ளியில் இருந்து மாணவன் தங்கராஜ் வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து இவனது வகுப்பு ஆசிரியை தாய்க்கு தகவல் கொடுத்துவிட்டு இருவரும் மாணவனை தேடிய நிலையில் அந்த பகுதியில் உள்ள சாலையில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது அந்த பகுதி மக்கள் சிறுவனை விசாரித்த போது அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததற்கான அறிகுறிகள் இருந்ததால் முதலில் அந்த தாய் ஆசிரியர் அடித்து விட்டதாக மக்களிடம் கூறியுள்ளார் இந்த செய்தி சமூக வலைதளத்தில் பரவியது இதனை தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகள் இலுப்பூர் ஆர்டிஓ மற்றும் தாசில்தார் ஆகியோர் அந்த பள்ளிக்கு விரைந்து சென்று தாய் மற்றும் ஆசிரியை உள்ளிட்டோரிடம் தொடர் விசாரணை நடத்தினர் விசாரணையில் பள்ளிக்கு செல்ல முடியாது என்று கூறியதால் தாயே கம்பால் தனது மகன் தங்கராஜை அடித்ததை தாய் ஒப்புக்கொண்டார் மேலும் இதில் ஆசிரியருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதை தொடர்ந்து தாயை எச்சரித்து அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

Similar News