கடந்தகால பாதிப்புகளை பாடமாகக் கொண்டு வருங்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்-வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் பேட்டி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள விரைவில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்;கடந்தகால பாதிப்புகளை பாடமாகக் கொண்டு வருங்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்-வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் பேட்டி;

Update: 2025-10-07 10:00 GMT
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள விரைவில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்;கடந்தகால பாதிப்புகளை பாடமாகக் கொண்டு வருங்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்-வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் பேட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள சிதம்பராபுரம், செட்டிகுறிச்சி மற்றும் சின்ன செட்டிகுறிச்சி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதியில் பலன் அளிக்கும் தருவாயில் இருந்த சுமார் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து நாசமாயின.இதற்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி விவசாயிகள் வைத்த கோரிக்கையை ஏற்று ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மாநில அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,இயற்கை பேரிடர் போல இப்பகுதியில் வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய இழப்பீடு வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இந்த பகுதியில் வாழை சாகுபடி தொடர்ந்து நடப்பதால் இப்பகுதி பிர்காவில் பதிவேற்றம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த பகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வாழை விவசாயம் இதுபோன்று பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் விவசாயத்துறையுடன் இணைந்து எதிர்காலங்களில் இது போன்று மீண்டும் சூறாவளி காற்றால் பாதிப்பு ஏற்படாதவாறு விவசாயத் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர இருக்கும் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்வதற்கு தமிழக முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அதற்கு முன்பாக அனைத்து துறை அதிகாரிகளையும் தயார் நிலையில் இருக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Similar News