புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேற்பனை காட்டை சேர்ந்தவர் வல்லரசு (28). இவர் மேற்பனைக்காட்டில் கடந்த ஒரு வருடமாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் அவரது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.