விராலிமலை திருச்சி மாவட்டம் கருங்குளம் கொசவம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(55). இவர் இலுப்பூர் பேரூ ராட்சி அலுவலகத்தில் குடிநீர் திட்ட மின் பணியாள ராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து பைக்கில் ஊருக்கு வந்துக் கொண்டிருந்தார். விராலிமலையை அடுத்த நம்பம் பட்டி அருகே வந்தபோது, முன்னால் பழுதாகி நின்ற டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக பைக் மோதி யது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிருஷ் ணன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.