புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கிலிருந்து புதுக்கோட்டைக்கு ராஜலிங்கம் (45) பைக்கில் சென்றுள்ளார். அப்போது, நமணசமுத்திரம் அருகே உள்ள கம்மஞ்செட்டி சத்திரம் சாலையில் அவருக்கு பின்னால் காரை ஓட்டி வந்த திருநாகேஸ்வரன் (31) மோதியதில் ராஜலிங்கத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.