இருமல் மருந்து உயிரிழப்பு: தனியார் ஆலையின் உரிமையாளர் ரங்கநாதன் கைது

மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-10-09 17:08 GMT
காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரத்தில் அவரது மருந்து ஆலை உள்ளது. தமிழக போலீஸாரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீஸார் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். தற்போது, ரங்கநாதனிடம் மத்தியப் பிரதேச போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, தமிழக அரசு கடந்த வாரம் முதலே இந்த மருந்து நிறு​வனத்​தின் உற்​பத்​தியை உடனடி​யாக நிறுத்த உத்​தர​விட்​டதுடன், ‘கோல்ட்​ரிப்’ இரு​மல் மருந்தை தமிழகம் முழு​வதும் விற்​பனை செய்​யத் தடை விதித்​து, மருந்து இருப்​பு​களை அகற்​ற​வும் உத்தரவிட்டது. மருந்​துக் கட்​டுப்​பாட்​டுத் துறை அதி​காரி​கள் விளக்​கம் கேட்டு அந்​நிறு​வனத்​தில் நோட்​டீஸ் ஒட்​டினர். இதனிடையே, மத்​தி​யப் பிரதேச சிறப்​புப் புல​னாய்​வுக் குழு​வினர் நேற்று சுங்​கு​வார்​சத்​திரம் வந்​தனர். மருந்​துக் கட்​டுப்​பாட்​டுத் துறை அதி​காரி​களை​யும், உள்​ளூர் காவலர்​களை​யும் அவர்​கள் தொடர்பு கொண்​டனர். இதன் தொடர்ச்சியாகவே, ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News