புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சியிலும் நாளை (அக்.,11) காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சாலைகள் மற்றும் தெரு பெயர் மாற்றம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.