தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செங்கல்பட்டில் நடந்த குண்டு எறிதல் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தங்கம் வென்ற கைக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரி மாணவி சி.அர்ச்சனாவை பாராட்டி கல்லூரி கல்விக்குழுத் தலைவர் குரு தனசேகரன் நினைவு பரிசு வழங்கினார். அப்போது அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.