விராலிமலை நேதாஜி நகரைச் சேர்ந்த பழனியம்மாள் (72) என்பவர் நேற்று அதிகாலை விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வானதிராயன்பட்டி பிரிவு சாலை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் பழனியம்மாள் மீது மோதியுள்ளது. அதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.