தாராபுரம் அமராவதி ஆற்றோரம் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை எடுக்க மனு

அமராவதி ஆற்றோரம் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை கோரி, நகராட்சி ஆணையாளரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு;

Update: 2025-10-11 13:59 GMT
நாம் தமிழர் கட்சியின் சார்பில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் காந்தி தலைமையில், ஆர்.டி.ஓ. மற்றும் தாராபுரம் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது:- தாராபுரம் நகர் மற்றும் புறநகர், சுற்றுவட்டாரம், அமராவதி ஆறு மற்றும் கால்வாய் கறைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிப்பது வாடிக்கையாக உள்ளது. கொழிஞ்சிவாடி, பழையபாலம் அதன் மேற்கு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுகிறது. அமராவதி ஆறு ஈஸ்வரன் கோவில் மேற்கு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் மழைக்கா லங்களில் அமராவதி ஆற்றில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News