மக்கள் சந்திப்பு கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பங்கேற்பு

மதுரை அருகே நிலையூரில் நடந்த பாஜகவின் கிராம பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.;

Update: 2025-10-12 14:17 GMT
தமிழகம் தலை நிமிர தமிழகத்தின் பயணம் என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சியாக மதுரை கைத்தறி நகர் பகுதியில் கிராம பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (அக்.12) பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் பாஜக மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அதிமுக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் TTV எங்கள் கூட்டணியில் இருந்தவர்தான். ஆனால் எடப்பாடி குறித்து கூட்டணியில் உள்ளவர்கள் கூறும் ஐடியாவை கேட்க முடியாது இன்றிலிருந்து கவுண்டன் ஸ்டார்ட் ஆகிறது. திமுக ஆட்சியின் நாட்கள் குறைக்கப்படுகிறது என்றார்.

Similar News