பாதுகாப்பு பணியினை ஆய்வு செய்த காவல் ஆணையர்.

மதுரை விளக்குத்தூண் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமான காரணத்தால் காவல் ஆணையர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியினை ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-10-12 15:45 GMT
தீபாவளி பண்டிகைக்காலம் நெருங்குவதை முன்னிட்டும், வார விடுமுறை நாள் என்பதாலும் இன்று (12.10.2025) மதுரை மாநகர் B1 விளக்குத்தூண் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பஜார் பகுதியை சுற்றியுள்ள கடைகளில் ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வெள்ளம் அலைமோதியதை தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அவர்கள் அப்பகுதியில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் துரித படுத்தும் விதமாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் படி, அப்பகுதி முழுவதும் CCTV கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டும், பொதுமக்களிடையே கூட்ட நெரிசல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கும் விதமாக மாநகர காவல்துறையினரால் துண்டுபிரசுரங்கள் வழங்கியும், ஒலிப்பெருக்கிகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News