மின்சாரம் தாக்கியதில் கொத்தனார் பலி

மதுரை உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கியதில் கொத்தனார் பலியானார்.;

Update: 2025-10-12 15:52 GMT
மதுரை உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த காமாட்சி( 55) என்ற கொத்தனார் வீட்டில் முதல் மாடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது நேற்று (அக்.11)மாலை பணி முடிந்தபின் கட்டடத்தின் மேல் இருந்த இரும்பு கம்பிகளை ஒதுங்க வைத்து கொண்டிருந்த போது, அருகில் இருந்த மின்சார கம்பியில் பட்டதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News