விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை
மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.;
மதுரையில் இன்று (அக்.12) மாலை பாஜகவின் பிரச்சார துவக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது திருமாவளவன் வாகன விபத்து தொடர்பான வழக்கில் தமிழக அரசு விசாரணை செய்த பிறகு திருமாவளவன் கட்சியால் தான் நடைபெற்றது ஊர்ஜிதம் ஆகப்போகிறது. அதன் பிறகு திருமாவளவன் அரசியலை விட்டு வெளியே செல்வாரா? விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திருமாவளவன் எண்ண ஓட்டத்தில் ஏதோ பிரச்சனை உள்ளது. குழம்பிப் போய் இருக்கிறார் என்றார்.