தீயணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு
காங்கேயம் தீயணைப்பு நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி;
காங்கேயம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வளாகத்தில் பொதுமக்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதற்கு, காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்கள், கனரக வாகன ஓட்டுனர்கள், தொழில் முனைவோர் கலந்துகொண்டு தீ விபத்தின் போது தீயை எவ்வாறு அணைப்பது, தீ விபத்தில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, உடன் இருப்பவர்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். இதில், தீயணைக்கும் உபகரணங்கள், மீட்பு பணிக்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு செயற்கையாக தீயை உருவாக்கி செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது.